police inspector sridhar and si balakrishnan bail petition filled

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் சித்ரவதை கொலை தொடர்பாக, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி, 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்பட ஐந்து காவலர்களைக்கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் எஸ்.எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று விசாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.