
சென்னை J9, துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார் விஜயன். பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து +2வில் 485/600 மார்க் எடுத்து மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த ஏழை மாணவி ரம்யாவை பற்றி போலீஸ் பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் கிளப் மூலம் காவல்துறை ஆய்வாளர் விஜயன் பார்வைக்கு வந்துள்ளது.
அந்த தகவல் கிடைத்த உடனே விஜயன் முயற்சி செய்து அந்த மாணவியை எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில், மாணவி படிக்க நினைத்த பாடப் பிரிவில் சேர்த்து, முதல் தவணை தொகையையும் கொடுத்து மாணவியின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இதனைக் கேட்ட உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் பாய்ஸ் & கேர்ள்ஸ் கிளப்பிற்கு பொது மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர் சார்பகவும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.