/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/periyasaamy-ins-diss-art.jpg)
திருச்சி மாவட்டம் கானகிளியநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவர் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காவல்துறை பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி கடந்த 05.11.2020 முதல் 24.04.2022 வரை நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது நாகப்பட்டினம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீச்சாங்குப்பம் கடற்கரை பழைய மீன்பிடி துறைமுகத்தில் படகில் 400 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் இருந்தது.
அப்போது தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் பார்ட்டியுடன் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரால் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேரில் 5வது நபரான சிலம்பு செல்வன் (தந்தை பெயர் : செந்தில்வேல்) என்பவர் கஞ்சா கடத்தலுக்கு முளையாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரிடமும் வாக்குமூலம் பெற்று அவரை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்ககாமல் இருந்துள்ளார்.
அதோடு அவருக்கு சொந்தமான படகுகள், மற்றும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி இந்த குற்ற வழக்கிற்கு ஆதரவாக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரிக்காமலும் சிலம்புசெல்வனை இக்குற்ற வழக்கிலிருந்து காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார். மேலும் குற்ற வழக்கு தொடர்பாக பெரியசாமி தனது கடமையிலிருந்து தவறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கல் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 400 கிலோ கிராம் கடத்தலுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்படும் வகையில் நடந்து கொண்டு தனது கடமையிலிருந்து தவறியுள்ளார்.
இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரால் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய வழக்கின் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு காவல் செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்படும் வகையில் நடந்து கொண்ட குற்றம் சாட்டப்பட்டவரின் செயலானது ஒழுங்கீனமான மற்றும் கடமை தவறினார். அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 20 கிலோகிராமிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரால் பதிவு செய்யப்பட்ட நாகப்பட்டினம் நகர காவல் நிலைய வழக்கின் தடயப்பொருள் 400 கிலோகிராம் கஞ்சா இருந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/periyasaamy-ins-diss-art1.jpg)
இது தெரிந்திருந்தும் மேற்படி தலைமை அலுவலக அறிவுரை படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை ஏதும் தொடராமல் இருந்து தனது கடமையிலிருந்து தவறிய ஒழுங்கீனமான நடந்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் அறிவுரைப்படி கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 20 மூலம் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நாகப்பட்டிணம் நாக காவல் நிலைய அதிகாரியாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவரால் பதிவு செய்யப்பட்ட நாகப்பட்டினம் நகர காவல் நிலைய குற்ற ஆய்வாளர் சீருடையில் தனியார் விடுதியில் ஒன்றாக அமர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் உணவு சாப்பிடும் புகைப்படமானது தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் வாயிலாக வெளியாகி பொது மக்கள் மத்தியில் காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்துள்ளார். இப்படி தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காவல் பணியில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)