Advertisment

முதல்வர் வருகையையொட்டி திருச்சி என்.ஐ.டியில் போலீசார் ஆய்வு!

 Police inspect Trichy NIT following CM's visit

நாளை தமிழக முதல்வர் பங்கேற்க இருக்கும் திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். Z. ஆனி விஜயா ஆகியோர் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவிட் கேர் வார்ட் பயன்பாட்டிற்காக தனிமைப்படுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை நடக்கும் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பின்னர் அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா ஆகியோர் பார்வையிட்டு கரோனா தடுப்பு பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இருந்தனர்.

Advertisment

police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe