Police informer arrested for liquor case

Advertisment

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் காவல்துறைக்கு அவ்வப்போது ஊருக்குள் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல் கொடுக்கக் கூடியவராக பணியாற்றிவந்துள்ளார். ஆனால் ஊருக்குள் தான் காவல்துறையில் பணியாற்றுவதாக கூறிவந்துள்ளார்.

ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறை ஒரு இன்ஃபார்மர் வைத்து அப்பகுதியில் நடக்கக்கூடிய செயல்களை, நிகழ்ச்சிகளை சேகரிக்கும் பணியை முன்னெடுத்துவரும் நிலையில், போலீஸ் இன்ஃபார்மராக பணியாற்றிய சுரேஷ், தற்போது அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராயம் காய்ச்சும் ஊரல் போட்டுள்ளார்.

இதுகுறித்த தகவல் அப்பகுதி பொது மக்களால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முசிறி காவல் நிலைய தனிப்படை, அவர் ஊறல் போட்டிருந்த கள்ளச்சாராய கேன்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும்பறிமுதல் செய்ததோடு அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.