/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police_137.jpg)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவரது மனைவி கிர்த்திகா (32). இவர்களுக்கு, நந்தினி (11) என்ற மகளும், கோகுல்நாத் (14) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் இருவரும் அருகே உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பார்த்தபோது, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் துப்பட்டாவின் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கீர்த்திகா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி கடன் தொகையைத்திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக கீர்த்திகா தனது குழந்தைகள் இருவரையும் கொன்று தானும் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)