police incident tn cm palanisamy announced relief fund

Advertisment

லாரி மோதிய விபத்தில் மரணமடைந்த தலைமைக்காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர், ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிப்புரிந்து வந்தார். அவர் 07.05.2020 அன்று தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜுவாடியில், கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சென்னையிலிருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால், கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமைக் காவலர் சேட்டு பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

police incident tn cm palanisamy announced relief fund

Advertisment

பணியின் போது உயிரிழந்த தலைமைக்காவலர் சேட்டுவை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சேட்டுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் சேட்டுவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.