
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியிலிருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் நிறுத்தாமல் வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றனர். அவர்கள் ஆடுகளைத் திருடும் கும்பலைச் சேர்த்தவர்கள் என்பதனை தெரிந்துகொண்ட எஸ்.ஐ பூமிநாதன் அவர்களின் இரு சக்கர வாகனங்களை விரட்டி சென்றார். அந்த ஆசாமிகள் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்றபோது ஒரு டூவிலரை தடுத்து நிறுத்திய எஸ்.ஐ பூமிநாதன், அதிலிருந்த திருடர்களைப் பிடித்தார்.
இதனைத் தெரிந்து, சென்ற மற்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது எனக் கூற, அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக எஸ்.ஐ பூமிநாதனை தாக்கினார்கள். படுகாயமடைந்த எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில்தான் அவ்வழியே சென்ற நபர்கள் மூலம்தான் தெரியவந்தது. ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற எஸ்.ஐ வெட்டிக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)