Advertisment

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு... எஸ்.எஸ்.ஐ கைது!  

police incident in salem

நேற்று (22.06.2021) மாலை சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை எடுத்த பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கக்கூடிய சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின்போது எடப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவிஆய்வாளர் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி என்பவர் லத்தியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், தாக்குதலுக்குள்ளான முருகேசன் நேற்று மாலை அரசு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

முன்னதாக, எடப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் நேற்று மாலை வீட்டில் இருந்து புறப்படும்போது கருமந்துறை சென்று வருவதாக கூறியிருக்கிறார். எந்த காரணத்திற்காக அவர் சென்றார் என்பது தெரியாத நிலையில், மது அருந்திவிட்டு அவ்வழியே வந்ததாகவும், வாகன தணிக்கையின்போது அவரை நிறுத்திய காவல்துறையினருக்கும் முருகேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி முருகேசனை பின்மண்டையில் தாக்க, காயமடைந்த முருகேசன் தடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதையடுத்து முருகேசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை முதலே குவிந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்எஸ்ஐ பெரியசாமிமற்றும் அவருடன்இருந்த காவல்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது விசாரணை அடிப்படையில் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

incident police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe