police incident fund in cuddalore district

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட காவலர் குடும்பத்துக்கு அவருடன் பயிற்சியில் இருந்த காவலர்கள் நிதியுதவி அளித்தனர். தமிழக காவல்துறையில் பயிற்சி பெறும் காவலர்கள் தங்களுக்குள் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் தங்களது பேட்ச் காவலர்கள் இறந்துவிட்டாலோ, விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உதவும் பொருட்டு வாட்ஸ் அப் குழுவின் மூலம் செய்தி பரப்பி உதவி செய்து வருகிறார்கள்.

Advertisment

அந்த வகையில் 2017- ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பயிற்சி பெற்று கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்திரகிள்ளைக் கிராமத்தை பெரியசாமி பணியில் இருந்தார். இவர் கடந்த மே மாதம் 18- ஆம் தேதியன்று சிதம்பரம் தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்தபோது குடும்ப பிரச்சனை காரணமாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

தற்கொலை செய்து கொண்ட காவலர் பெரியசாமியின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 2017- ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் அவர்களது பங்களிப்பு மூலம் ரூபாய் 3.38 லட்சம் சேர்த்தனர்.

இன்று பெரியசாமியின் வீட்டிற்கு அவரது பேட்ச் காவலர்கள் சென்று பெரியசாமியின் படத்திற்கு மாலை அணிவித்து, அவர் நினைவாக அவரது வீட்டில் தென்னங்கன்று நட்டு வைத்தனர். மேலும் பெரியசாமியின் பெற்றோர்களான முனுசாமி,சாந்தி ஆகியோரிடம் பணத்தை வழங்கினர்.

Advertisment