
கடலூரில் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதியில்நேற்று (16.02.2021) வீரா என்பவர் வீட்டில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தபோது அவரை சுற்றிவளைத்தசில நபர்கள், அவரதுகழுத்தை அறுத்து தலையை மட்டும் கொண்டு சென்றனர்.இந்த கொடூரக்கொலை சம்பவத்தில்நேற்று முதல் காவல்துறையினர் வீராவின் தலையைத் தேடிவந்தனர். கழுத்து இல்லாதுகைப்பற்றப்பட்ட அவரது உடல்பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நேற்று இரவு முழுவதும் இந்தக் கொடூரக் கொலைக்கு என்ன காரணம் என மாவட்டம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் புதுப்பேட்டை காவல்சரகத்திற்கு உட்பட்ட மலட்டாற்றில்இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.அதில் கிருஷ்ணா என்ற நபர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாககாவல் துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.அங்கிருந்து அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.கிருஷ்ணாவிற்கும் வீராவிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், இதனால்தான் இந்த அளவிற்கு கொடூரமான கொலை செய்துள்ளதாகவும் போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கழுத்து அறுக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும்,கொலையில் ஈடுபட்ட ஒரு நபர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவமும் பண்ருட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)