கடந்த ஞாயிறுஇரவு மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பாலத்தின் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செல்லூர் டெல்டா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வாலிபரைபோலீசார் லத்தியால் பின் மண்டையில் தாக்கியதில், தங்கவேல் என்பவரது மகன் விவேகானந்குமார் என்கிறவிவேக் (வயது சுமார் 38) என்பவர் காதில் இரத்தம் வந்து சம்பவ இடத்தில் மயங்கிய நிலையில் மதுரை அரசுமருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

police hit the vehicle.. tension at Madurai government hospital

அதன்பின் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இதனால்அரசு மருத்துவமனையில் பதட்ட நிலை ஏற்பட்டதால்போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisment

police

Advertisment

இந்நிலையில் இன்று அதிகாலையில் நேற்று கணவர் இறந்த மனவேதனையில் அழுதுகொண்டே இருந்த விவேகானந்தனின்மனைவி கஜபிரியா வீட்டு குளியல் அறையில் தூக்குபோட்டு கொண்டார். இதைக்கண்ட அவரதுகுடும்பத்தினர் கதவை உடைத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேரத்தனர்.இந்த தகவல் அறிந்து அங்கு கூட்டம் கூடியதால்போலீஸார் குவிக்கபட்டனர்.

police

மேலும்பத்திரிகையாளர்கள் யாரையும் விட மறுத்த நிலையில் நாம் டாக்டரோடு டாக்டராக உள்ளே சென்று என்ன நிலைமையில் இருக்கிறார் என்றுஅவருக்கு சிகிச்சஅளிக்கும் மருத்துவரிடம் கேட்டபோது மிகவும் சீரியஸாக இருக்கிறார் யாரையும் உள்ளே விடகூடாது என்று உத்தரவு என்றார். நேரம் ஆக ஆக மருத்துவமனை வளாகத்தை சுற்றி பொதுமக்கள் கூட்டமும், பதட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.