Advertisment

துப்பாக்கி சுடுதல் போட்டி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட காவல் உயர் அதிகாரிகள்!

police higher official games held in perambalur naranamangalam 

Advertisment

காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்உத்தரவின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும் காவல் துணைகண்காணிப்பாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி (11.04.2023)பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் ஐபிஎஸ் முதல் இடத்தையும் மற்றும் ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி முதல் இடத்தை பிடித்தார்.

ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் முதல் இடத்தை பிடித்தார். இதில் வெற்றி பெற்றுள்ள அதிகாரிகள் மாநில அளவிலான காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் காவல் உயர் அதிகாரிகள்மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Games police Perambalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe