Skip to main content

குற்றங்கள் குறைய 'காவடி' எடுத்த காவல்துறை!

Published on 12/12/2020 | Edited on 13/12/2020

 

Police have take 'Kavadi' to reduce crime!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று, தக்கலை வெளிமலை குமாரசாமி கோயில். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமுடன் வாழ வருடந்தோறும், கார்த்திகை மாதத்தில் வரும் இறுதி வெள்ளிக்கிழமையில் காவடி எடுத்து ஊர்வலமாக, நேர்த்திக்கடன் செலுத்துவது இந்தக் கோவிலில் வழக்கம்.

 

மக்கள் நலமுடன் வாழ்வதற்காக, மன்னர் காலத்தில் பின்பற்றி வந்த, இந்த நடைமுறையானது தற்போதும் பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. விவசாயம் செழிக்கவும் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் பல்வேறு (காவல்துறை, பொதுப்பணித்துறை) துறையினர் சார்பில், காவடி எடுக்கும் நிகழ்வு வருடா வருடம் நடைபெறுகிறது. யானை மீது பால்குடம், வேல் காவடி, புஷ்ப காவடி எனப் பல்வேறு விதமான காவடிகள் இந்த விழாவில் இடம்பெறும்.

 

வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, கரோனா காரணமாகப் பல கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணத்தால் யானை ஊர்வலம், பறக்கும் காவடி போன்றவைகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இந்த வருடம் 100-க்கும் மேற்பட்ட காவடிகள் எடுக்கப்பட்டது. ராமன்பாம்பு முட்டைக்காடு, பத்மநாபபுரம், ராமன்பரம்பு, வலியகரை,  தென்கரை,  வெட்டிகோணம், குலசேகரம், இரணியல், கோணம், வழுக்கலம்பாடு, முத்தலக்குறிச்சி, தக்கலை பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளைச் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.