Police have seized drugs worth Rs 1 lakh 25 thousand

சிதம்பரம் காவல்துறையினருக்கு சிதம்பரம் நகரத்தில் போதை புகையிலை பொருட்கள் ஹான்ஸ், பான்குட்கா அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையிலான காவலர்கள் மேலவீதி அருகே உள்ள பாவாமுதலி தெரு, இளமையாக்கினார் கோயில் தெரு பகுதியில் புகையிலை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்தனர்.

Advertisment

அப்போது அந்த பகுதியில் இருந்த கடைகளில் தொடர் சோதனையில் ஈடுபட்டபோது 4,500 பாக்கெட் போதை புகையிலை கைபற்றினர். இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த சிதம்பரத்தைச் சேர்ந்த நைனாராம், வீரமணி, அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment

சிதம்பரம் பகுதியில் போதை புகையிலை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.