Police have not taken any action regarding dead body floating river

திருச்சி நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் முழங்கால் அளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஆண் சடலம் மிதந்தபடி நகர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் இன்று(30.3.2022) ஸ்ரீரங்கம், நம்பர் 1 டோல்கேட், மண்ணச்சநல்லூர்ஆகிய மூன்று காவல் நிலையத்தையும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு வந்த மூன்று காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார்களும் சடலம் கிடக்கும் இடம் எங்களது எல்லைக்குள் வரவில்லை என்று கூறி திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு மூன்று காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களும் எங்களது எல்லை இல்லை என்று சொல்லித்திரும்பிச் சென்றதைத்தொடர்ந்து சடலம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

Advertisment