பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி; 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்

Police have arrested people who tried to steal a gold chain from a woman  Coimbatore

கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியை சேந்த கௌசல்யா அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று நடைப்பயிற்சி சென்றிருந்தார். அப்பொது அங்கு தனியாக சென்று கொண்டிருந்த கௌசல்யா பின்னால் காரில் வந்த கொள்ளையர் செயினை பறிக்க முயன்றார். இதில் கௌசல்யா கீழே இழுத்து தள்ளப்பட்டார். இருப்பினும் தனது செயினை இறுக்கிப் பிடித்திருந்ததால் கொள்ளையர்களால்செயினை பறிக்க முடியாமல் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பான வீட்யோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பீளமேடு போலீசார், 24 மணி நேரத்திற்குள்ளே செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், செயின் பறிக்க முயன்றவர் சக்திவேல் என்பதும் காரை ஒட்டி வந்தவர் அபிஷேக் என்பதும் தெரியவந்துள்ளது.

arrested Coimbatore police
இதையும் படியுங்கள்
Subscribe