Advertisment

Police have arrested 6 peoplPolice have arrested 6 people for gambling with money in Erodee for gambling with money in Erode

ஈரோட்டில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

இதில், அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு மற்றும்ரூ. 2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.