Advertisment

மோடியின் படம் அருகே நின்று 'இந்துத்துவா எதிர்ப்பு கோஷம்'-நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்துவைத்த காவல்துறை!

The police hastily ended the 'anti-Hindutva slogan'-show by standing near Modi's picture!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நிலக்கோட்டை நான்கு மணி சந்திப்பில் பெரியாரின்144வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அதே நான்கு மணி சந்திப்பில் நான்கு பக்கமும் பாஜக கட்சியினர் மோடியின் பிறந்தநாள் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தனர். இதனிடையே அதேபகுதியில் மிகப் பிரமாண்ட அலங்கார அமைப்பில் பெரியார் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பெரியார் படத்திற்கு பின்னணியில் மோடியின் படம் தெளிவாக தெரிந்த போதும் அதன் அருகில் நின்று கொண்டு பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்த திமுக பேரூர் செயலாளர் ஜோசப், விசிக தமிழரசன், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்துத்துவாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட் 'சுவீட்ட குடுங்க... சுவீட்ட குடுங்க...' என்று சொல்லி நிகழ்ச்சியை வேகமாக முடித்து வைத்தார். இருந்தாலும் தொடர்ந்து கட்சிக்காரர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

Advertisment

modi periyar nilakottai police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe