Advertisment

நடிகர் சூர்யா வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

Police guard actor Surya's house!

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். மேலும் வன்னியர் சமூகத்தினரைத் தவறாகச் சித்தரித்ததற்காக சூர்யா உள்ளிட்ட ஜெய் பீம் படக்குழுவினருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சில தரப்பு கருத்துகளைப் பரப்பி வந்தது. இச்சூழலில், சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு வெளியே, 5 ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்புப்பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

jai bhim Chennai police house actor surya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe