Police got injured by rowdy

Advertisment

அரித்துவாரமங்கலம் பகுதியில் ரவுடி ஒருவர் காவலர் ஒருவரின் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police got injured by rowdy

திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் மணிகண்டன். அரித்துவாரமங்கலம் கடைவீதியில் குடிபோதையில் ரவுடி சூர்யா என்பவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாக சென்ற காவலர் மணிகண்டன், அவரைப் பிடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி சூர்யா, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது காவலர் மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு ரவுடி சூர்யாவை பிடித்து கீழே தள்ளிவிட பொதுமக்கள், காவலர் மணிகண்டனை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisment

Police got injured by rowdy

இருப்பினும் காவலர் மணிகண்டன் கழுத்தில் ஆழமாக கத்தி பதிந்ததால் ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்ததை அடுத்து அரித்துவாரமங்கலம் காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலரை ரவுடி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.