
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு சார்பு ஆய்வாளரைமர்ம நபர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அடிவாரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தானகிருஷ்ணன். நேற்றிரவுஇவர் புதுநகர் சாலையில் அமர்ந்து ஆனந்தன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சில நபர்கள் மது அருந்திக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. இதனைஆனந்தன் தட்டி கேட்டுள்ளார்.
அப்பொழுது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் எஸ்.எஸ்.ஐ சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆனந்தனை அரிவாளால் தாக்கினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆனந்தன் மற்றும் சந்தானகிருஷ்ணன் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் பொழுது எஸ்.எஸ்.ஐ சந்தான கிருஷ்ணன் சீருடையில் இல்லை எனக்கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)