Police flag parade on the occasion of Ganesha idol procession

திருச்சி மாநகரத்தில் பிள்ளையார் சிலை ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனைப்பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும் கொண்டாடும் வகையில், திருச்சி மாநகரக் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.அரியமங்கலத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பினை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் காமினி எஸ்.ஐ.டி. கல்லூரியிலிருந்து தொடங்கி வைத்து நடந்து சென்றார்.

Advertisment

இந்த கொடி அணிவகுப்பு காமராஜ் நகர், முத்துமாரியம்மன் கோவில், ராஜ வீதியில் உள்ள 22 தெருக்கள், ஜி.டி. நாயுடு தெரு வழியாக தஞ்சை மெயின் ரோட்டிற்கு வந்து ஆயில் மில் செக் போஸ்ட் வழியாக பிரகாஷ் மஹாலில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து உறையூர் பகுதியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு உறையூர் காவல் நிலையத்தில் தொடங்கி பாண்டமங்கலம் அரசமரத்தடி, பணிக்கன் தெரு, டாக்கர் ரோடு, நாச்சியார் கோவில் சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் உறையூர் காவல் நிலையத்தில் முடிவடைந்தது.

Advertisment

இதில் காவல் துணை ஆணையர், கூடுதல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திருச்சி மாநகரில் எந்தவித இடையூறு இல்லாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் வகையில், விழா அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் வந்து காவிரியாற்றில் சிலைகளைக் கரைத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருச்சி மாநகரக் காவல் ஆணையர் காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.