Police fitness test ..! Villupuram District Superintendent of Police involved in the consultation

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களுக்கான உடல்தகுதித் தேர்வு நாளை மறு நாள் (ஜூலை 26) நடக்கிறது. மொத்தம் பத்தாயிரம் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கரோனா ஊரடங்கு மற்றும் தேர்தல் காரணமாக உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

Advertisment

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இத்தேர்வுகள், நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடக்கிறது. இந்த 20 மையங்களில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டம், கா.குப்பம் ஆயுதப்படை மைதானமும் இருக்கிறது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எழுத்து தேர்வு எழுதி தேர்வாகிய 2256 ஆண்கள் மற்றும் 700 பெண்கள் இந்த மைதானத்தில் உடற்தகுதி தேர்வுக்கு வரவிருக்கின்றனர்.

Advertisment

அதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில், விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் M.பாண்டியன், தலைமையில் இன்று பாதுகாப்பு, முன்னேற்பாடு மற்றும் நடவடிக்கை குறித்து சிறப்பு ஆலோசனை முன்னோட்டம் நடைபெற்றது.