
ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தக் கோரி நேற்று(16.11.2021) தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த செப். 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. ஒன்றரை மாதம் மட்டுமே நேரடி வகுப்பு நடந்தது.இந்நிலையில், ‘நேரில் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில்தான் தேர்வு வைக்க வேண்டும். உடனடியாக வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கும் நேரடி தேர்வுகளை, அதாவது ஆஃப்லைன் தேர்வுகளை ரத்து செய்து ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஊர்வலமாகச் சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Follow Us