திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும்கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவீடியோ வெளியான நிலையில்விடுதலை சிகப்பிமீதுபாரத் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் என்பவர் அபிராமபுரம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.