Police file case against 200 dmdk

Advertisment

தேமுதிகவின்கொடி நாள் நேற்று(12.02.2021) தேமுதிகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட தேமுதிகதலைவர் விஜயகாந்த், பிரச்சார வேனில் ஏறி, கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கையசைத்தார். அதன்பின் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிலையில் தேமுதிகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகதலைமை அலுவலகத்திற்கு 75 வாகனங்களில் ஊர்வலமாகசென்றவிருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட தேமுதிகவினர் 200 பேர் மீது விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.