காதலி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்; ‘நடந்தது என்ன?’ - போலீசார் விளக்கம்!

Police explained What happened on Young man incident at girlfriend house

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் உயிரிழந்த இளைஞரின் உடற்கூராய்வில் அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 49). இவரது மகன் தனுஷ் (வயது 22) காவஸ்தலத்தில் உள்ள தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (19.06.2025) காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் தந்தை துரைசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல்நிலையத்தில் இயற்க்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பல செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் இறப்பு தொடர்பாக பல்வேறு யூகங்களும் சந்தேகங்களும் பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் சம்பவ இட விசாரணையிலும், சாட்சிகள் விசாரணையிலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெற்ற விசாரணையிலும் இறந்து போன தனுஷ் என்பவரும் குலசேகரம் காவஸ்தலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்ததுள்ளனர். இடையில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இருப்பினும் இளைஞர் மீண்டும் காதலை தொடர முயற்சி செய்துள்ளார். அனால் அதனை அந்த பெண் நிராகரித்துள்ளார்.

இதனால் தனுஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. அதே சமயம் இறந்து போன நபரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து ன்று (20.06.2025) உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனை அடிப்படையிலும் இளைஞரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது. எனவே இளைஞரின் இறப்பு தொடர்பாக எவரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

explanation incident Investigation Kanyakumari police
இதையும் படியுங்கள்
Subscribe