/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren_23.jpg)
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). கூலித்தொழிலாளியான இவருக்கு மாதம்மாள் என்றமனைவியும், இத்தம்பதியருக்கு கோபாலகிருஷ்ணன் (வயது 25), பாலகிருஷ்ணன் (வயது 23) என இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் கோபாலகிருஷ்ணன் தார்ப்பாய் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
மேலும் கடந்த 2 வருடமாக கோபாலகிருஷ்ணன் சரிவர வேலைக்குச் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் பெற்றோர் இருவரும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கோபாலகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளார். மதியம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் கோபாலகிருஷ்ணன் தாய் மாதம்மாள் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோபாலகிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோபாலகிருஷ்ணனை மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாகத்தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us