Advertisment

நடவடிக்கை எடுக்காத போலீசார்... ஆட்சியரிடம் மனு அளித்த பாதிக்கப்பட்டவர்கள்!

Police did not take action ... Victims who petitioned the Collector

திருச்சி திருவெறும்பூர்பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநரான குமார் மற்றும் அவரது மனைவி ஜீவிதா. இவர்களின் இளைய மகள் சுவாதி, 10ஆம் வகுப்புவரை படித்துள்ளார். இவர், இதே பகுதியைச் சேர்ந்த தனியார் கார் ஓட்டுநரான பிரேம்குமார் என்பவரைக் கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பதற்காக சுவாதியின் தாயாரிடம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கார் வாங்கியுள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு காரை விற்று அதில் வந்த பணத்தை செலவழித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை எழுந்துள்ளது. இதுகுறித்து சுவாதியின் தாயார் ஜீவிதா, பிரேம்குமாரிடம் கடன் பணத்தைக்கேட்டதற்கு, வெளியூர் சென்று சம்பாதித்து கடனை அடைப்பதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற பிரேம்குமார், கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை.

Advertisment

இந்நிலையில் பிரேம்குமார், இரண்டு மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துவிட்டு தற்போது பெங்களூருவில் வேலை பார்த்துவருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று (20.12.2021) காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சுவாதி தனது தாயாருடன் மனு அளித்துள்ளார்.

petition trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe