Advertisment

சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள்; பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஜிபி 

police dgp appreciate to police officers in ariyalur  

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, திருச்சியில் காவல்துறையைச் சார்ந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர் பணிகள் சிறக்கஅவர்களைஅழைத்துப்பாராட்டினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisment

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை பெண் காவலரான வனிதா நீதிமன்ற அலுவல் பணிகளை சிறப்பாக செய்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறுவதற்கு விரைவாக பணி புரிந்தமைக்காக சான்று வழங்கினார்.

Advertisment

மேலும் செந்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் செந்தில் முருகன் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைத்திறமையான முறையில் ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு உதவி செய்தமைக்காகபாராட்டு சான்றிதழ் வழங்கினார். மீன்சுருட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரபாகரன் மீன்சுருட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பாக தகவல் சேகரித்து செயல்பட்டமைக்காக சான்று வழங்கினார்.

காவல்துறையினர் சிறப்பாக தங்கள் பணிகளை செய்ததற்காக காவலர்களை நேரடியாக அழைத்து பணியைப் பாராட்டி தமிழக காவல்துறை இயக்குநர் சான்றிதழ் வழங்கியது காவல்துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர்மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

DGPsylendrababu police Ariyalur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe