நாளை சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் பிரம்மாண்டமான பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கக்கூடிய திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 Police deny permission for DMK rally?

Advertisment

Advertisment

நாளை சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அழைப்புகளும் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தவிருக்கும் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த இந்த மனுவானதுஅவசர வழக்காகவிசாரணைக்கு வந்தது. இந்தநிலையில் நாளை நடைபெற இருக்கக்கூடிய திமுக பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாகதகவல் வெளியாகியுள்ளது.