Skip to main content

கள்ளச் சாராயத்தைத் தடுக்க விழிப்புணர்வு வழங்கும் காவலர்கள்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

Awareness

 

விழுப்புரத்தையடுத்த ஆலகிராமத்தில் கள்ளச்சாரம் விற்பனையைத் தடுக்கும் விதமாக காவல்துறையினர், 'கள்ளச்சாராயம் இல்லாத கிராமமாக மாற்றுவோம்' என்று தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

விழுப்புரத்தையடுத்த பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலகிராமத்தில்,  புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து காவல் துறையினருக்குப் புகார் வந்ததையடுத்து பெரியதச்சூர் காவல் நிலைய காவலர்கள் ஆலகிராமத்தில் தடை செய்யப்பட்ட சாராயத்தினை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி அறுவுறுத்தினர்.

 

Awareness

 

இதனையடுத்து கள்ளச்சாரம் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் காவல் நிலையத்தை அணுகவும் என்றும் சாராயம் விற்பனை செய்யக்கூடாதென கிராமம் முழுவதும் தண்டோரா அடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

மேலும் கள்ளச்சாரத்தியனைத் தடுக்கும் பொருட்டு ஆலகிராமத்தில் அண்ணா கிராமப்புற குற்றத்தடுப்பு என்ற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கிராமத்தில் இதுவரை 2017 லிருந்து 10 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்