/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sadassjd.jpg)
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, பெரியார் பிறந்த நாள் அன்று, கடலூர் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார்சிலைக்கு, புதுநகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அந்தப் புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதிவேற்றினர்.
இந்நிலையில்,அவர்கள் மூவரும் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றமாகியிருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, அவர் ஒரு சமுதாய தலைவர். மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். அவரின் போராட்டங்களால் கல்வியறிவு பெற்றவர்கள், வேலை வாய்ப்பு பெற்றவர்கள், வாழ்வாதாரம் பெற்றவர்கள் அவரை நினைவு கூறும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்துவதுதவறான காரியம் அல்ல. அப்படி இருக்கையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காரணத்தால், காவலர்கள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பெரியாரிய உணர்வாளர்களும்,பல்வேறு அரசியல், சமூக இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)