சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் உள்ளது. 31.05.2018 வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு சென்றனர். இரவு 10.30 மணியளவில் ஊழியர் ரவி மேஜைகளை கண்காணித்த போது மேஜையில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்த போது அதற்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்தார்.

Advertisment

உடனடியாக அந்த பையை மானேஜர் பாலுவிடம் ஒப்படைத்தார். இருவரும் ஓட்டல் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் நேற்று காலையில் அந்த பணப்பையை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Accumulating appreciation for the employee

பணத்தை கண்டெடுத்ததும் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். அவருக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். பணத்துக்கு உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை. உரிமை கோரி வருபவர்களிடம் விசாரணை நடத்தி உரியவரிடம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

Accumulating appreciation for the employee

வாடிக்கையாளர் விட்டு சென்ற 25 லட்சம் பணத்தை அடங்கிய பையை நேர்மையான முறையில் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி ஓட்டல் பணியாளர் ரவி, ஓட்டல் மேனேஜர் பாலு மற்றும் நிர்வாகத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் தாலுக்காவைச் சேர்ந்தவர் ரவி. 38 வயதான ரவி இந்த ஓட்டலில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.