Advertisment

வரதட்சணை கொடுமை; போலீசில் பெண் புகார் 

Advertisment

police complaint for dowry issue in trichy district manapparai 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கீரணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது முத்துலட்சுமியின் பெற்றோர் சார்பில் ஜீவானந்தத்திற்கு நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் மீண்டும் முத்துலட்சுமியின் கணவர் ஜீவானந்தம், அவரது தாயார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சின்னையன், குமார், மகாலட்சுமி, கவிதா, கோமதி, பாலசுப்பிரமணியன் வடிவேல், கலையரசி ஆகிய 10 பேரும் முத்துலட்சுமியிடம் 100 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் இந்த அளவுக்கு மீண்டும் நகை, பணம் எனது பெற்றோரால் தர இயலாது. அந்த அளவுக்கு வசதி இல்லை என எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஜீவானந்தம் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dowry Manaparai police trichy
இதையும் படியுங்கள்
Subscribe