/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/40_63.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் ஆவடி பெட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா(24) கடந்த 12-ம் தேதி பிரசவத்திற்காக வேலூர் அடுகம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது, பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் மருத்துவமனையை அணுகிக் கேட்டு உள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று(16-ம் தேதி) இரவு அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து கோடீஸ்வரன் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து, சுகப் பிரசவத்திற்காக மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று 17-ம் தேதி காலை குழந்தை இறந்தது பிறந்து உள்ளது. பின்னர் தாய் அனிதாவும் இறந்துள்ளார்.
இதனை அடுத்து மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களால் தான் தன் மனைவியும் தன் குழந்தையும் இருந்துள்ளதாக கோடீஸ்வரன் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)