Skip to main content

மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்



R3 அசோக் நகர் காவல் நிலையத்தில் நேற்று 18.8.17 ம் தேதி 17.45 மணிக்கு ஸ்டீவின் மேத்யூ ஆ/வ19 த/பெ ராஜூவ் தாமஸ் எண் 118 இராமசந்திரா தெரு ஜாபர்கான்பேட்டை சென்னை - 83 என்ற விலாசத்தை பூர்விகமாக கொண்டவர். கத்தார் நாட்டில் தனது தாய் தந்தையாருடன் வசித்து வருகிறார். 

இவர் மன வளர்சி குன்றியவர் கடந்த ஆண்டு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கத்தார் நாட்டுக்கு சென்றிருந்த போது அங்கு நடந்த நிகழ்சிக்கு இந்திய தூதரகம் சார்பில் இந்த மாணவர் படிக்கும் பள்ளியில் இருந்து 25 மாணவர்கள் (மன வளர்சி குன்றியவர்கள்) அந்த நிகழ்சியில் கலந்து கொண்டுள்ளனர். 

அப்போது பாரத பிரதமர் அவர்கள் இந்த மாணவர்களிடம் கலந்துரையாடும் போது இந்த மாணவரிடம் என்ன ஆக ஆசைபடுகிறிர்கள் என்று கேட்டபோது. தான் ஒரு நாள் காவல் அதிகாரியாக பணிபுரிய விருப்பம் என்று கூறிவுள்ளார். அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்களை மாணவரின் பெற்றோர் சந்தித்து கூறியுள்ளார்கள். காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுபடி நேற்று 18.8.17ம் தேதி 17.45 மணி முதல் 1 மணி நேரம் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தனது லட்சியத்தை நிறைவேற்றினார்

-செண்பகபாண்டியன்

சார்ந்த செய்திகள்