Advertisment

திருமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் கமில் பாஷா விரைவில் பணியிடை நீக்கம்?

திருமங்கலம் உதவி ஆணையர் கமில் பாஷா மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த 13-ஆம் தேதி இரவுதிருமங்கலம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள்சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது மேஜை லாக்கரில் இருந்து 2,57,500 ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

Advertisment

மேலும் அடுத்தநாள் நடந்த கூட்டு சோதனையில் கமில் பாஷாவை சந்திக்க வந்த கொரட்டூரை சேர்ந்தஒப்பந்ததாரர் செல்வம் என்பரிடம் நடந்த சோதனையில், அவரிடம் 2,51,000 ரூபாயையும், அவருடைய டைரியில் இதுவரை கமில் பாஷாவிற்கு கொடுத்த தொகை பற்றிய கணக்கு குறிப்பு இருந்ததும் தெரியவந்தது.

kamil

இதைத்தொடர்ந்து மொத்தம் ஐந்து லட்சம் தொகை பற்றிகமில் பாஷாவிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்அவர் கூறியபதில்கள் ஏற்றுகொள்ளும்படி இல்லை என தெரிவித்துள்ளனர் .

Advertisment

மேலும் லஞ்சஒழிப்பு போலீசார், உதவி ஆணையர் கமில் மீதுலஞ்ச ஒழிப்பு சட்டம் உட்பட3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பானமுழுத்தகவலையும் பெறஇதில் தொடர்புடையவர்களிடமும்,கமில் பாஷாவிடமும் தொடர்ந்துவிசாரணை நடத்தவுள்ளனர். எனவே குற்றம் சுமத்தப்பட்ட உதவி ஆணையர் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Commissioner arrest police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe