Police 'combing operation' in Salem; 100 rowdies arrested overnight!

சேலத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட ‘கோம்பிங் ஆபரேஷன்’ நடவடிக்கையில் ஒரே இரவில் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்கவும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையில் அவ்வப்போது ‘கோம்பிங் ஆபரேஷன்’ எனப்படும் அனைத்துப்பிரிவு காவல்துறையினரும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனையில் ஈடுபடுவது நடைமுறையில் இருந்துவருகிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த காவல்துறையினரும் வியாழக்கிழமை (23.09.2021) கோம்பிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் விடிய விடிய கோம்பிங் ஆபரேஷன் நடந்தது. சேலம் மாநகரில் காவல்துறை ஆணையர் நஜ்மல்ஹோடா மேற்பார்வையிலும், மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையிலும் இந்த ஆபரேஷன் நடந்தது. விடிய விடிய நடந்த வேட்டையில், சேலம் மாநகர பகுதியில் மட்டும் ஒரே இரவில் 73 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பலர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 5 ரவுடிகளும் இந்த வேட்டையில் சிக்கியுள்ளனர். கிச்சிப்பாளையம் காவல் எல்லையில் மட்டும் அதிகபட்சமாக 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டப் பகுதியில் நடந்த கோம்பிங் ஆபரேஷனில், 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட அனைத்து ரவுடிகளும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.