கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 80-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில், விருத்தாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவிகள் விளையாடுவதற்கு இடையூறாக இருந்த முட்புதர்கள், மரம் மற்றும் செடி கொடிகளை, மம்பட்டி மற்றும் அரிவாள் கொண்டு, வெட்டி அப்புறப்படுத்தினர். காவல்துறையின் இச்செயல்பாட்டை கண்டு பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.