சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் மற்றும் இபிஎஃப், பி எஃப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை மாலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலக கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் உதவியாளர் சந்திரசேகர் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ 1 லட்சத்து 20 ஆயிரத்து100 ரூபாய் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளனர். பணத்தைக் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.