உலகத்தையே உலுக்கி வருகிறது கரோனா வைரஸ். லட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியுள்ளது கரோனா. இதனால் தமிழகத்தில் மார்ச் 31ந்தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 15ந்தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனை மீறி பெரும்பாலான படித்த, படிக்காத இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலைகளில் உலா வருகின்றனர். ஒரே இருசக்கர வாகனத்தில் இருவர், மூவர் கூட பயணம் செய்கின்றனர். இப்படியெல்லாம் வரக்கூடாது என மைக் வழியாக காவல்துறையினர் எச்சரித்தும் இளைஞர்கள் கேட்கவில்லை. முதலில் எச்சரித்த போலீஸ் பின்பு லத்தியால் விரட்டி விரட்டி அடிக்க துவங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரம், ஆரணி, செங்கம் பகுதிகளில் இளைஞர்கள் பந்தா காட்டிக்கொண்டு வீதியுலா வர அவர்களை மடக்கினால் காவல்துறையினரை நக்கலடித்தபடி எதிர்க்கொள்ள அவர்களை லத்தியால்அடித்துதுரத்துகின்றனர். இதனால் மார்ச் 25ந்தேதி மதியத்துக்கு மேல் இளைஞர்களின் எண்ணிக்கை சாலைகளில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.