Advertisment

பிளாக்கில் மது விற்பனை - தலைதெறிக்க ஓடவிட்ட போலீஸ்!

police chased persons who sale Liquor on the block

திருச்சி தலைமை தபால் நிலையம் பாலத்திலிருந்து கல்லுகுழி சேரும் இடத்தில், பக்கவாட்டு குறுகிய சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது.இந்த மதுபான கடைக்கான பார் அதிகாலை முதலே செயல்பட்டுவருவதாகவும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகவும்கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரனுக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையில் அங்கு சென்ற போலீசாரைக் கண்டதும், மது அருந்துபவர்கள் தெறித்து ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் இருவரைப் பிடித்தனர்.மேலும்,பாரை குறித்த நேரத்திற்கு முன்பாக திறந்துவைத்து, மது அருந்த அனுமதித்த பார் பணியாளர்கள் 2 பேரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் முத்துசெல்வம், சரவணகுமார், அமுதகன், அகமது பாட்ஷா என்ற 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Alcohol business TASMAC trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe