Advertisment

காவல் நூற்றாண்டு உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி..! 

Advertisment

தமிழக காவல் துறையை சார்ந்த காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ்நாடு காவல் நூற்றாண்டு 2018-2019ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருச்சி கே.கே நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல் தலைமை வகித்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார். மேலும் 39 காவல் ஆளிநர்களுக்கு அரசு வழங்கும் ரூபாய் 2,000 வெகுமதி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குழந்தைகளுக்கான தமிழ்நாடு காவல் நூற்றாண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான உயிர் கல்வி உதவித்தொகை காசோலை வழங்கப்பட்டது.இவ்விழாவில் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

trichy police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe