Advertisment

குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்கள்; வெள்ள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி!

Police celebrating baby's birthday!

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பெருமழை வெள்ளம் காரணமாகத் தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள், தங்குவதற்காகத் தமிழக அரசு நிவாரண முகாமை பெருங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தி அங்கு பாதிப்புக்குள்ளான மக்கள் தங்க வைத்துள்ளனர்.

Advertisment

துரைப்பாக்கம் J9 காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமில் பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில் அந்த முகாமில் உள்ள மோனிகா என்னும் ஒரு வயது பெண் குழந்தைக்குப் பிறந்தநாள் என்ற விவரம் தெரிய வந்தவுடன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து அந்த ஒரு வயது பெண் குழந்தைக்குப் புத்தாடை, சாக்லேட், பலூன், கேக் போன்ற பரிசுப் பொருட்களை வாங்கி அந்த முகாமில் உள்ள நபர்களோடு சேர்த்து அந்த குழந்தையின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

Advertisment

இந்த உணர்வுப் பூர்வமான நிகழ்ச்சியில் துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ், தலைமை காவலர் நவரத்தினம், முதல் நிலை காவலர் சூரியச்சந்திரன், தலைமை பெண் காவலர் பாரதி, முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர்கள் சிறப்பாக நடைபெற வழிவகை செய்தனர்.. .இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யும் காவலர்களின் இச்செயலை அனைவரும் பாராட்டினார்.

இந்த சம்பவம் அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நெகிழச் செய்தது.

birthday police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe