Advertisment

கோவில் சிலையை உடைத்து பூசாரிக்கு கொலைமிரட்டல்; இளைஞர் மீது வழக்கு

police case has been registered against youth who broke temple threatened

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, உளுத்திமடை கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவிலில் உடையார் என்பவர் பூசாரியாக இருக்கிறார். செங்கமடையைச் சேர்ந்த காளீஸ்வரன்அக்கோவிலில் உள்ள முனியப்பசாமி சிலையை உடைத்ததோடுஅரிவாளால் சாமியின் முகத்தைக்கொத்திசேதப்படுத்தவும் செய்திருக்கிறார்.

Advertisment

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட பூசாரி உடையார் பதறியடித்துக் கோவிலுக்குச் சென்றபோது, சிலையை உடைத்த காளீஸ்வரன் “இங்கிருந்து போறியா? உன்னையும் சாமி சிலையைப் போட்டுகொல்லவா?” எனச் சத்தம் போட்டு கல்லைத் தூக்கியிருக்கிறார். அதற்குள் உளுத்திமடை கிராமத்தினர் அங்குத்திரண்டு வர, காளீஸ்வரன் தப்பி ஓடியுள்ளார். பிறகு கிராமத்தினர் கலந்து பேசிகட்டனூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, காளீஸ்வரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

viruthunagar case police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe