Advertisment

குடித்துவிட்டு ரகளை செய்ததாக நடிகர் விஷ்ணு விஷால் மீது வழக்கு!!

police case on actor vishnuvishal

Advertisment

நடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு தங்கி இருக்கும் குடியிருப்பில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வாக்குவாதம் செய்வது தொடர்பான வீடியோக்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'தான் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடவில்லை' என நடிகர்விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வருகிறார்.அடுக்குமாடி குடியிருப்பில் (வாடகை) நடிகர் விஷ்ணு விஷால் தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக குடியிருப்பின் செயலாளராக இருக்கக்கூடிய ரங்கபாபு என்பவர் கூடுதல் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் காவல் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது. வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்கள் என பலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யும் வகையில்செயல்பட்டதாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

Advertisment

போலீசார் விசாரித்தபோதுஅவர்கள்முன்னிலையிலேயே புகார் கொடுத்தவரிடம் விஷ்ணு விஷால் தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும்வெளியாகி உள்ளது.

case police vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe