எருக்கஞ்சேரி பகுதியில் இருந்து எம்.ஆர். நகர் வழியாக குடிபோதையில் கார் ஓட்டிவந்த டிராபிக் போலீஸ் எஸ்.ஐவினாயக மூர்த்தி,இரு டூவிலர்களை இடித்துவிட்டு சாலையில் தாறுமாறாகச்சென்றதால்,பிற வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிறகு மூலக்கடை சிக்னலில் காரை நிறுத்திய படி மற்றவர்களைப் போகவிடாமல் வழிமறைக்கவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பொதுமக்கள் அவரைப் பிடித்து ஒரு கடையில் அமரவைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த அப்பகுதி போலீசாரிடம், எஸ்.ஐ வினாயக மூர்த்தியைப் பொதுமக்கள் ஒப்படைத்துச் சென்றனர் .