Advertisment

காவல்நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்... பெற்றோர்களை விசாரணைக்கு அழைத்த போலீஸ்

 Police call lovers parents for questioning

Advertisment

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (21) என்பவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். ஈரோட்டில் உள்ள உறவினர்களைப் பார்க்க அடிக்கடி சென்று வருவார். இந்த நிலையில் ஈரோட்டில் கல்லூரி ஒன்றில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் திவ்யா (வயது20) என்ற பெண்ணுடன் பழகி, இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இவர்களுடைய காதலுக்கு திவ்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி வயலூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe